2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எல்.பி.எல்: கொழும்பு ஸ்டார்ஸை வென்ற கோல் கிளாடியேட்டர்ஸ்

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 11 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), பல்லேகலவில் நேற்று நடைபெற்ற கொழும்பு ஸ்டார்ஸுடனான போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கிளாடியேட்டர்ஸின் அணித்தலைவர் குசல் மென்டிஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளாடியேட்டர்ஸ், லஹிரு உதாரவின் ஆட்டமிழக்காத 45 (30), மென்டிஸின் 39 (27), தனுக தப்ரேயின் 36 (27), நுவனிடு பெர்ணாண்டோவின் 29 (16) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜெஃப்ரி வன்டர்சே 4-0-31-2, ரவி பொப்பாரா 1-0-4-1, நவோத் பரணவிதான 4-0-28-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 175 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்டார்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களையே பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 58 (44), பொப்பாரா 46 (35) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வஹாப் றியாஸ் 4-0-21-2, இப்திஹார் அஹ்மட் 2-0-12-2, நுவான் துஷார 4-1-23-1, இமாட் வஸீம் 4-0-24-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக உதார தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X