Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற தம்புள்ள ஓறாவுடனான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்டார்ஸின் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓறா, கசுன் ராஜித (5), சுரங்க லக்மால், ஜெஃப்ரி வன்டர்சே (2), கரிம் ஜனட்டிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 13.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 90 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்டார்ஸ், சரித் அஸலங்கவின் ஆட்டமிழக்காத 58 (36), தினேஷ் சந்திமாலின் ஆட்டமிழக்காத 31 (32) ஓட்டங்களோடு 11.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், பிரமோத் மதுஷன் 2-1-3-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக ராஜித தெரிவானார்.
இதேவேளை, முன்னதாக நடைபெற்ற ஜஃப்னா கிங்ஸுடனான போட்டியில் கண்டி பல்கொன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கண்டி பல்கொன்ஸ்
கண்டி பல்கொன்ஸ்: 160/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பேபியன் அலென் 47 (23), அன்ட்ரே பிளட்சர் 35 (22), அஷேன் பண்டார 24 (24), சாமிக கருணாரத்ன ஆ.இ 18 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுனித் வெல்லலாகே 2/7 [4], ஜேம்ஸ் புல்லர் 2/28 [4])
ஜஃப்னா கிங்ஸ்: 150/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சதீர சமரவிக்கிரம 48 (41), அவிஷ்க பெர்ணாண்டோ 33 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: கார்லோஸ் பிறத்வெய்ட் 4/18 [4], வனிடு ஹஸரங்க 2/21 [4], பேபியன் அலென் 1/22 [4], இசுரு உதான 1/27 [4])
போட்டியின் நாயகன்: பேபியன் அலென்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago