Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற கொழும்பு ஸ்டார்ஸுடனான போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கிங்ஸின் அணித்தலைவர் திஸர பெரேரா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ், டொம் கொஹ்லர்-கட்மோரேயின் 92 (55), உபுல் தரங்கவின் 37 (33), வனிடு ஹஸரங்கவின் ஆட்டமிழக்காத 19 (07), அஷான் றந்திகவின் 16 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், நவீன்-உல்-ஹக் 4-0-27-3, ஜெஃப்ரி வன்டர்சே 4-0-33-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு, 194 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்டார்ஸ் சார்பாக டொம் பன்டன் மாத்திரமே 30 (33) ஓட்டங்களைப் பெற்றதுடன், ஏனையோர் குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெறாத நிலையில் 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களையே பெற்று 102 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், ஜேடன் சியல்ஸ் 2.5-1-13-4, யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4-0-32-3, மஹேஷ் தீக்ஷன 4-0-25-2, ஹஸரங்க 3-0-8-0, உஸ்மான் ஷின்வாரி 2-0-9-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இதில், பன்டன், குசல் பெரேரா, கீமோ போல் என அதிரடித் துடுப்பாட்டவீரர்களின் விக்கெட்டுகளை வியாஸ்காந்த் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் நாயகனாக டொம் கொஹ்லர்-கட்மோரே தெரிவானார்.
22 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
47 minute ago