Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.
லேஸியோ சார்பாக, ஜோக்கின் கொரெரா இரண்டு கோல்களையும், சிரோ இம்மொபைலி ஒரு கோலையும் பெற்றனர்.
இப்போட்டி முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 79 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 68 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லாண்டாவும், 66 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நாப்போலியும் காணப்படுகின்றன. நடப்புச் சம்பியன்கள் ஜுவென்டஸ், ஏ.சி மிலன் ஆகியவையும் 66 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் முறையே நான்காம், ஐந்தாமிடங்களில் காணப்படுகின்றன.
34 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
47 minute ago
59 minute ago