2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஏப்ரலில் இலங்கையில் விளையாடவுள்ள பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதிக்கிடையில் இலங்கைக்கு பயணிக்கலாமென பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

தாங்கள் இலங்கை கிரிக்கெட் சபையைத் தொடர்புகொண்டதாகத் தெரிவித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி நிஸாமுடீன் செளத்ரி, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிலுள்ள இரண்டு டெஸ்ட்களைத் தாங்கள் உறுதிப்படுத்தியதாகவும், இரண்டும் ஓரிடத்தில் விளையாடப்படும் என்று கூறியுள்ளார்.

அந்தவகையில், கடந்தாண்டு இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டு போட்டிகளாகக் குறைக்க இரண்டு கிரிக்கெட் சபைகளும் இணங்கியுள்ளது போலத் தெரிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .