Shanmugan Murugavel / 2016 மே 15 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமருந்துகளைப் பயன்படுத்திய ரஷ்ய தடகள வீரர்கள், அந்நாட்டின் ஊழலுக்கெதிரான கட்டமைப்புகளால் இனங்காணப்படாமை குறித்து மன்னிப்பைக் கோருவதாகவும் அதுகுறித்து வெட்கமடைவதாகவும் அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டலி முற்கோ தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கெதிரான உலக முகவராண்மையால் வெளியிடப்பட்ட, ரஷ்யா மீதான உச்சபட்ச விமர்சனத்தை வெளிப்படுத்தும் அறிக்கையைத் தொடர்ந்து, சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக, இன்னும் 82 நாட்களே உள்ள நிலையில், றியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள், இன்னமும் இல்லையென்றே கருதப்படுகிறது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், 2016 றியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக, ரஷ்யாவின் தடைகளை நீக்காமலிருப்பது, மிகவும் நியாயமற்றதாகவும் பொருத்தமற்றதாகவும் அமையும் எனத் தெரிவித்ததோடு, நேர்மையான வீரர்கள், தண்டனைக்குள்ளாக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஊழலுக்கெதிரான முகவராண்மை, அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து, வீரர்களின் ஊக்கமருந்துப் பயன்பாட்டை மறைத்ததாகவே பிரதான குற்றச்சாட்டுக் காணப்படுகின்ற நிலையில், அதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'ரஷ்யாவின் பிரச்சினை இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஊக்கமருந்துப் பயன்பாட்டை இல்லாதொழிப்பதற்காக, அரச மட்டத்தில் முடிந்த அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறோம். ஊக்கமருந்து விதிகளை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தடகள வீரர்களையும் பயிற்றுநர்களையும் தண்டிப்பது, அதில் உள்ளடங்குகிறத" எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .