2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஏழாமிடத்துக்கு முன்னேறினார் பெக்லுவாயோ

Editorial   / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஏழாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் சகலதுறைவீரர் அன்டிலி பெக்லுவாயோ முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஒரு ஓவருக்கு 6.85 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய நிலையிலேயே ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை பெக்லுவாயோ அடைந்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஒரு ஓவருக்கு 6.06 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், 38ஆம் இடத்திலிருந்து 29 இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. இமாட் வசீம், 3. ஷடாப் கான், 4. அடில் ரஷீட், 5. மிற்செல் சான்ட்னெர், 6. அடம் ஸாம்பா, 7. அன்டிலி பெக்லுவாயோ, 8. ஷகிப் அல் ஹஸன், 9. முஜீப் உர் ரஹ்மான், 10. ஃபாஹீம் அஷ்ரப்.

இந்நிலையில், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து பங்கேற்ற முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் 145 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு ஓவருக்கு 7.22 ஓட்டங்களை வழங்கி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்கொட்லாந்தின் றிச்சி பெரிங்டன், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்கள் பின்வருமாறு

  1. கிளென் மக்ஸ்வெல், 2. ஷகிப் அல் ஹஸன், 3. மொஹமட் நபி, 4. றிச்சி பெரிங்டன், 5. மகமதுல்லா.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. கிளென் மக்ஸ்வெல், 3. கொலின் மன்றோ, 4. ஆரோன் பின்ஞ், 5. ஹஸரத்துல்லா ஸஸாய், 6. டார்சி ஷோர்ட், 7. ஃபக்கர் ஸமன், 8. அலெக்ஸ் ஹேல்ஸ், றோகித் ஷர்மா, 10. லோகேஷ் ராகுல்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .