2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஐ. அமெரிக்க பகிரங்கத் தொடரில் வீனஸ்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் தனிநபர்ப் போட்டிகளில் 44 ஆண்டுகளில் பங்கேற்கும் மிகவும் வயதானவராக அந்நாட்டின் வீனஸ் வில்லியம்ஸ் மாறவுள்ளார்.

ஏழு தடவைகள் கிரான்ட் ஸ்லாம் சம்பியனான வீனஸ் ஜூலை மாதத்தில் போட்டிகளுக்குத் திரும்பியிருந்தார்.

ஐ. அமெரிக்க பகிரங்கத் தொடரில் 1981ஆம் ஆண்டு 47 வயதான றெனி றிச்சர்ட்ஸ் பங்கேற்றதைத் தொடர்ந்து தொடரில் பங்கேற்கும் வயதானவராக வீனஸ் மாறவுள்ளார்.

இறுதியாக 2023ஆம் ஆண்டு ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் வீனஸ் பங்கேற்றிருந்தார்.

இதேவேளை கலப்பு இரட்டையர் பிரிவில் சக ஐ. அமெரிக்கரான றெய்ல்லி ஒபெல்காவுடன் ஐ. அமெரிக்க பகிரங்கத் தொடரில் வீனஸ் பங்கேற்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .