Shanmugan Murugavel / 2016 மே 03 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) டெஸ்ட் தரப்படுத்தலில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்து, புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்தே, இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தனது முதலிடத்தில் தொடர்ந்தும் காணப்படும் அவுஸ்திரேலிய அணி, இரண்டாமிடத்திலுள்ள அணியுடனான தனது இடைவெளியை, ஆறாக அதிகரித்துக் கொண்டது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி தொடர்ந்தும் காணப்படும் நிலையில், மூன்றாமிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி, 3 இடங்கள் பின்தங்கி, ஆறாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது.
இலங்கை அணி, தொடர்ந்தும் 7ஆவது இடத்திலேயே காணப்படுவதுடன், இங்கிலாந்துக்கெதிராக இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள தொடரை வெற்றிபெற்றால், 6ஆவது இடத்துக்கு முன்னேற முடியும்.
புதிய தரப்படுத்தல்:
1. அவுஸ்திரேலியா 2. இந்தியா 3. பாகிஸ்தான் 4. இங்கிலாந்து 5. நியூசிலாந்து 6. தென்னாபிரிக்கா 7. இலங்கை 8. மேற்கிந்தியத் தீவுகள் 9. பங்களாதேஷ் 10. சிம்பாப்வே.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago