2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஐ.சி.சியின் தவிசாளர் பதவிக்காக பதவி விலகவில்லை

Shanmugan Murugavel   / 2016 மே 11 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்த ஷஷாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) தவிசாளர் பதவியைப் பெறுவதற்காக இதைச் செய்யவில்லை என விளக்கமளித்துள்ளார்.

முன்னர் வெளியான செய்தியின் அடிப்படையில், ஐ.சி.சி தவிசாளர் பதவிக்காகவே அவர் பதவி விலகுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஐ.சி.சி தவிசாளராகப் பதவியேற்பவர், சுயாதீன வேட்பாளராக இருக்க வேண்டுமென்ற மாற்றத்தை ஏற்படுத்தியதே தானென்று குறிப்பிட்ட ஷஷாங் மனோகர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பதவி, உலகளாவிய ரீதியில் மிகவும் பலமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் பதவி விலகியமைக்கான காரணங்களை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்காத போதிலும், லோதா ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சிலவற்றில் தனக்கு உடன்பாடு கிடையாது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பரிந்துரைகள், கிரிக்கெட் சபையின் முன்னேற்றத்துக்குப் பொருத்தமானவையல்ல எனத் தெரிவித்த அவர், தற்போதைய நிலையில், தன்னால் செய்யக்கூடியது எதுவுமல்ல எனவும், தொடர்ந்தும் பணியாற்றுவதற்குத் தனக்கு, தன்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .