2025 மே 03, சனிக்கிழமை

ஐ.பி.எல் ஏலத்தில் ஸ்டோக்ஸ் இல்லை

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 06 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் 2025ஆம் ஆண்டு பருவகால வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யப்பட்ட 1,574 பெயர்களில் டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸின் பெயர் காணப்படவில்லை.

கடந்த பருவகால ஐ.பி.எல்லிலும் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஏலத்தில் பங்கேற்காவிட்டால் அடுத்தாண்டு ஏலத்திலும் தற்போதைய விதிமுறைகளின்படி பங்கேற்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்குறித்த பட்டியலில் இத்தாலியைச் சேர்ந்த தோமஸ் ட்ரக்காவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X