2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல் ஏலம்: 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஏலம் போன சமீர

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், இலங்கையின் நான்கு வீரர்கள் ஏலம் போயிருந்தனர்.

இரண்டு கோடி இந்திய ரூபாய்களுக்கு லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸால் இலங்கையணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர வாங்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, 70 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு சென்னை சுப்பர் கிங்ஸால் இலங்கையணியின் சுழற்பந்துவீச்சாளர் மஹேஷ் தீக்‌ஷன வாங்கப்பட்டிருந்தார்.

தவிர, கொல்கத்தா நைட் றைடர்ஸால் 50 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு இலங்கையணியின் சகலதுறைவீரர் சாமிக கருணாரத்ன வாங்கப்பட்டிருந்தார்.

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக இங்கிலாந்தின் சகலதுறைவீரர் லியாம் லிவிங்ஸ்டோனை 11.5 கோடி இந்திய ரூபாய்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X