Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 மார்ச் 28 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பையின் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதரபாத், ட்ரெவிஸ் ஹெட்டின் 62 (24), அபிஷேக் ஷர்மாவின் 63 (23), ஹென்றிச் கிளாசெனின் ஆட்டமிழக்காத 80 (34), ஏய்டன் மார்க்ரமின் ஆட்டமிழக்காத 42 (28) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்து ஐ.பி.எல் வரலாற்றில் இனிங்ஸொன்றில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. முன்னதாக 2013ஆம் ஆண்டு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு 263 ஓட்டங்களைப் பெற்றதே இதற்கு முன்னைய சாதனையாகக் காணப்பட்டது.
பதிலுக்கு 278 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை, இஷன் கிஷனின் 34 (13), திலக் வர்மாவின் 64 (34), றோஹித் ஷர்மாவின் 26 (12), நாமன் திர்ரின் 30 (14), டிம் டேவிட்டின் ஆட்டமிழக்காத 42 (22), தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய றொமாரியோ ஷெப்பர்ட்டின் ஆட்டமிழக்காத 15 (06) ஓட்டங்களோடு வெற்றியிலக்கை துரத்தியபோதும் இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களையே பெற்று 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஐ.பி.எல்லில் தோல்வியடைந்த போட்டியொன்றில் பெறப்பட்ட அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையை மும்பை பதிவு செய்தது.
தவிர இருபதுக்கு – 20 போட்டியொன்றில் இப்போட்டியில் மொத்தமாக பெறபட்ட 523 ஓட்டங்களோ, 38 ஆறு ஓட்டங்களோ இதுவரையில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் நாயகனாக அபிஷேக் ஷர்மா தெரிவானார்.
16 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
2 hours ago