Shanmugan Murugavel / 2024 மார்ச் 27 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸ் உடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற குஜராத்தின் அணித்தலைவர் ஷுப்மன் கில் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, றஷின் றவீந்திரவின் 46 (20), ஷிவம் டுபேயின் 51 (23), அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட்டின் 46 (36), டரைல் மிற்செல்லின் ஆட்டமிழக்காத 24 (20), சமீர் றிஸ்வியின் 14 (06) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு 207 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய குஜராத், தீபக் சஹர் (2), டரைல் மிற்செல், துஷான் தேஷபந்தே (2), தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராக டுபேக்குப் பதில் களமிறங்கிய மதீஷ பத்திரண, முஸ்தபிசூர் ரஹ்மானிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே பெற்று 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக டுபே தெரிவானார்.
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026