Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தானின் அணித்தலைவர் சஞ்சு சாம்ஸன், கொல்கத்தாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, சேட்டன் சக்கரியா (1), ஜெய்தேவ் உனத்கட் (1), முஸ்தபிசூர் ரஹ்மான் (1), கிறிஸ் மொறிஸிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ராகுல் ட்ரிபாதி 36 (26), தினேஷ் கார்த்திக் 25 (24), நிதிஷ் ரானா 22 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 134 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், வருண் சக்கரவர்த்தி (2), ஷிவம் மவி (1), பிரசீத் கிருஷ்ணாவிடம் (1) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும், சாம்ஸனின் ஆட்டமிழக்காத 42 (41), டேவிட் மில்லரின் ஆட்டமிழக்காத 24 (23), யஷஸ்வி ஜைஸ்வல் 22 (17), ஷிவம் டுபேயின் 22 (18) ஓட்டங்களோடு 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஷிவம் மவி நான்கு ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், சுனில் நரைன் நான்கு ஓவர்களில் 20 ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததுடன், பிரசீத் கிருஷ்ணா மூன்று ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக மொறிஸ் தெரிவானார்..
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026