Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தாவின் அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், சென்னையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, பப் டு பிளெஸியின் ஆட்டமிழக்காத 95 (60), ருதுராஜ் கைக்வாட்டின் 64 (42), மொயின் அலியின் 25 (12) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதோடு, சுனில் நரைன் நான்கு ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
பதிலுக்கு, 221 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, தீபக் சஹர் (4), லுங்கி என்கிடி (3), சாம் கர்ரனிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. எனினும், அன்ட்ரே ரஸலின் 54 (22), தினேஷ் கார்த்திக்கின் 40 (24), பற் கமின்ஸின் ஆட்டமிழக்காத 66 (34) ஓட்டங்களுடன் போராடியபோதும், 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களையே பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக டு பிளெஸி தெரிவானார்.
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago