Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சண்றைசர்ஸின் அணித்தலைவர் டேவிட் வோர்னர், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சண்றைசர்ஸ், மனிஷ் பாண்டேயின் 61 (46), கேன் வில்லியம்ஸின் ஆட்டமிழக்காத 26 (10), வோர்னரின் 57 (55), கேதார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 12 (04) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை, ருத்துராஜ் கைகவாட்டின் 75 (44), பப் டு பிளெஸியின் 56 (38) ஓட்டங்களோடு, 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக கைகவாட் தெரிவானார்.
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago