Shanmugan Murugavel / 2021 மே 02 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் இன்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட றோயல்ஸ், ஜொஸ் பட்லரின் 124 (64), அணித்தலைவர் சஞ்சு சாம்ஸனின் 48 (33) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ரஷீட் கான், நான்கு ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு, 221 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சண்றைசர்ஸ், குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களையே பெற்று 55 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், முஸ்தபிசூர் ரஹ்மான், நான்கு ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மொறிஸ், நான்கு ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி, நான்கு ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026