Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான, இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்) நாளை ஆரம்பிக்கின்றது.
நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸுக்கும், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்குமிடையே சென்னையில் நாளையிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுடனேயே ஐ.பி.எல்லின் 14ஆவது பருவகாலம் ஆரம்பிக்கின்றது.
கிரிக்கெட் காரணங்கள் தவிர, இந்தியாவில் கொவிட்-19 பரவலானது மீண்டும் அதிகரிக்கின்ற நிலையில் இத்தொடர் இடம்பெறுகின்றமையானது மிகுந்த கவனம் பெறுகின்றது. ஏனெனில், இவ்வாண்டுயிறுதியில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவிலேயே இடம்பெறவுள்ளது.
இதுவரையில் ஐந்து வீரர்களும், ஒரு பயிற்சியாளரொருவரும் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலகக் கிண்ணத் தொடரானது இம்முறை இந்தியாவில் நடைபெறுகின்றமை காரணமாக இந்திய வீரர்கள் தவிர, வெளிநாட்டு வீரர்களுக்கும் இத்தொடரானது சிறந்த முன்னோட்ட களமாகக் காணப்படுகின்றது.
அணிகளைப் பொறுத்தவரையில், ஹட்-ட்ரிக் தடவையாக சம்பியனாகும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் கொண்டதாகக் காணப்படுகின்றது. ஆனால், ஐ.பி.எல் என்றால் அதிர்ச்சிகள்தானே, ஆகவே இம்முறையும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காதெனக் கருதப்படுகிறது.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026