Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், சென்னையில் இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், கட்டுக்கோப்பாக பந்துவீசிய புவ்னேஷ்வர் குமார் (1), கலீல் அஹ்மட் (3), ரஷீட் கான் (1), அபிஷேக் ஷர்மா (2), சிதார்த் கோலிடம் (1) தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 121 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹைதரபாத், ஜொனி பெயார்ஸ்டோவின் ஆட்டமிழக்காத 63 (56), டேவிட் வோணரின் 37 (37) ஓட்டங்களோடு, 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago