Shanmugan Murugavel / 2024 மார்ச் 25 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூருவின் அணித்தலைவர் பப் டுபிளெஸி தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், அணித்தலைவர் ஷீகர் தவானின் 45 (37), ஜிதேஷ் ஷர்மாவின் 27 (20), பிரபஹ்சிம்ரன் சிங்கின் 25 (17), சாம் கர்ரனின் 23 (17), ஷஷாங் சிங்கின் ஆட்டமிழக்காத 21 (08), லியம் லிவிங்ஸ்டோனின் 17 (13) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 4-0-26-2, யஷ் தயால் 4-0-23-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 177 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு, விராட் கோலியின் 77 (49), தினேஷ் கார்த்திக்கின் ஆட்டமிழக்காத 28 (10), தாக்கம் செலுத்தும் மாற்று வீரராக தயாலுக்குப் பதிலாகக் களமிறங்கிய மஹிபால் லொம்ரோரின் ஆட்டமிழக்காத 17 (08) ஓட்டங்களோடு 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஹர்பிறீட் பிறார் 4-0-13-2, ககிஸோ றபாடா 4-0-23-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக விராட் கோலி தெரிவானார்.
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026