Editorial / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. இதன் முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியன் சென்னை வெற்றி பெற்றது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 17 நாட்களுக்கான ஐ.பி.எல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதில் 21 போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் திகதி வரை நடைபெற உள்ளன. 2-வது கட்ட அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
59 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago