Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் இன்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, பப் டு பிளெஸியின் 50 (41), ருத்துராஜ் கைக்வாட்டின் 33 (25), சுரேஷ் ரெய்னாவின் 24 (18) ஓட்டங்கள் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றதுடன், அம்பாதி ராயுடுவின் 14 (07), இரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 62 (28) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 192 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பெங்களூர், தேவ்டுட் படிக்கல்லின் 34 (15) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றபோதும், சாம் கர்ரன், ஷர்துல் தாக்க்கூர், ஜடேஜா, இம்ரான் தாஹீரிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை 122 ஓட்டங்களையே பெற்று 69 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், ஜடேஜா, நான்கு ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், தாஹீர் நான்கு ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், தாக்கூர் நான்கு ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026