2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஐ.பி.எல்: மும்பைக்கெதிராக 196 ஓட்டங்களைக் குவித்த குஜராத்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 29 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸுக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டான்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பையின் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா, குஜராத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத், சாய் சுதர்ஷனின் 63 (41), ஜொஸ் பட்லரின் 39 (24), அணித்தலைவர் ஷுப்மன் கில்லின் 38 (27), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் 18 (11) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. 

பந்துவீச்சில், ஹர்திக் பாண்டியா 4-0-29-2, ட்ரென்ட் போல்ட் 4-0-34-1, தீபக் சஹர் 4-0-39-1, மிற்செல் சான்ட்னெர் 3-0-25-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .