Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பாண்டிற்கான ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியை 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்துக் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது.
அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஃபாஃப் டு பிளெசிஸ் 33 ஓட்டங்களை பெற்றார். தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பட்லர் 49 ஓட்டங்களைக் குவித்த போதிலும் தொடர்ந்து வந்த வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்க தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026