2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

ஐபிஎல் ஏலம் விடுபவர் சரிந்து வீழ்ந்தார்

Freelancer   / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் 2022 பருவகாலத்துக்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்றுவரும் நிலையில்,வனிந்து ஹசரங்கவை பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் ஏலம் கேட்டு போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஏலம் விடுபவரான ஹூக் எட்மீட்ஸ் மேடையிலிருந்து திடீரென மயங்கி விழுந்தார்.

வனிந்து ஹசரங்கவை 10.75 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலம் கேட்டு பெங்களூர் ரோயல் சலெஞ்ஜெர்ஸ் அணி முன்னிலையில் இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

இதன் காரணமாக ஏலம் இடைநிறுத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு ஏலம் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X