2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஒப்பந்தத்தை இரத்துச் செய்த அல் ஹிலால், நெய்மர்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 28 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியக் கால்பந்தாட்டக் கழகமான அல் ஹிலாலின் முன்களவீரரான நெய்மருடன் அவரது ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கான இணக்கப்பாட்டொன்றை எட்டியுள்ளதாக அக்கழகம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

அந்தவகையில் தனது முன்னாள் பிரேஸிலியக் கழகமான சன்டோஸுக்குத் திரும்ப 32 வயதான நெய்மருக்கு வழியேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து 2023ஆம் ஆண்டு அல் ஹிலாலில் இணைந்த நெய்மர், அடுத்த பருவகாலம் வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தபோதும் ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்காக எஞ்சிய 65 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஊதியத்தில் 25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை விட்டுக் கொடுத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X