Shanmugan Murugavel / 2021 மே 05 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான ஒப்பந்தத்தை ஷிம்ரோன் ஹெட்மயர் இழந்துள்ளார்.
ஹெட்மயர் தவிர, ஷெல்டன் கோட்ரல், ஒஷேன் தோமஸ், கீமோ போல், சுனில் அம்பிறிஸ், பிரண்டன் கிங், றொவ்மன் பவல், றொமாரியோ ஷெப்பேர்ட் போன்றோரும் இவ்வாறு ஒப்பந்தங்களை இழந்துள்ளனர்.
இதேவேளை, அனைத்து வகையான போட்டிகளுக்கான ஒப்பந்தத்தை றொஸ்டன் சேஸ் இழந்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான ஒப்பந்தத்தை ஷமர்ஹ் ப்ரூக்ஸ், ஷேன் டெளரிச் ஆகியோர் இழந்துள்ளனர்.
இதேவேளை, டெஸ்ட் போட்டிகளுக்கான ஒப்பந்தத்தில் என்குறுமஹ் பொன்னர், ஜோஷுவா டா சில்வா, கைல் மேயர்ஸ் ஆகியோர் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.
தவிர, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான ஒப்பந்தத்தில் அகீல் ஹொஸைன் புதிதாக இடம்பெற்றுள்ளார்.
ஒப்பந்த பட்டியல் பின்வருமாறு,
அனைத்து வகையான போட்டிகள்: ஜேஸன் ஹோல்டர்
டெஸ்ட்கள்: கிறேய்க் பிறத்வெய்ட், ஜெர்மைன் பிளக்வூட், என்குறுமஹ் பொன்னர், ரஹீம் கொர்ன்வோல், ஜோஷுவா டா சில்வா, ஷனொன் கப்ரியல், கைல் மேயர்ஸ், கேமார் றோச்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள்: கெரான் பொலார்ட், பேபியன் அலென், டரன் பிராவோ, ஷே ஹோப், அகீல் ஹொஸைன், எவின் லூயிஸ், அல்ஸாரி ஜோசப், நிக்கலஸ் பூரான், ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர்.
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago