Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தவுள்ள ஜப்பானின் டோக்கியோ, அந்தப் போட்டிகளுக்கான புதியதோர் இலட்சினையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஓர் இலட்சினை வெளியாகியிருந்த நிலையிலேயே, தற்போது புதிய இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னர் வெளியிடப்பட்ட இலட்சினை, இன்னோர் இலட்சினையைப் பிரதிசெய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையிலேயே, தற்போது புதிய இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது.
இலட்சினைக்காக வைக்கப்பட்ட போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு, குறுகிய பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டிருந்த இலட்சினைகளில் ஒன்றே, இவ்வாறு புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.
டோக்கியோ 2020இன் இலட்சினைச் செயற்குழுவின் தலைவரான றையோஹெய் மியாட்டாவும் ஜப்பானின் ஓய்வுபெற்ற பேஸ்போல் ஜாம்பவானான சனஹரு ஓ-உம் இணைந்து, இந்த இலட்சினையை வெளியிட்டிருந்தனர்.
27 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago