Shanmugan Murugavel / 2021 ஜூலை 18 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ ஒலிம்பிக் தடகள வீரர்கள் கிராமத்தில் முதற் தடவையாக இரண்டு தடகள வீரர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஐந்து நாள்கள் முன்னதாக இக்கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று ஏற்பட்ட இரண்டு தடகள வீரர்களும் ஒரே அணி மற்றும் விளையாட்டைச் சேர்ந்தவர்கள் என போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வணியின் ஏனைய அங்கத்தவர்கள், அவர்களின் அறைகளின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒலிம்பிக் கிராமம் தவிர்ந்த வேறொரு இடத்திலிருந்து மேலுமொரு தடகளவீரர் இன்று கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago