2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஒலிம்பிக்கில் 169 ரஷ்யர்கள்

Editorial   / 2018 ஜனவரி 28 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யாவைச் சேர்ந்த 169 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

ஊக்கமருந்துப் பாவனை தொடர்பான விதிகளை மீறியமைக்காக, இந்த ஒலிம்பிக்கிலும் பங்குபற்ற, ரஷ்யாவுக்கு, கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஊக்கமருந்துப் பாவனை தொடர்பான வரலாற்றைக் கொண்டிருக்காத வீர, வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு வழங்கியது.
இதன்படியே, 169 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், ரஷ்யா சார்பாகவன்றி, பொது அணியாக விளையாடவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .