Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 10 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு விடுப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் இணைக்க நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது.
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
குறித்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்தாட்டம், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.
141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (15) ஆம் திகதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில் கிரிக்கெட்டை சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் இடம் டிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago