Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாங்கள் அனைவரும் எமது நிலையில் இருந்தால், நாங்களே முன்னிலையில் இருக்கலாம் என ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் பின்னர் மேற்கூறியதை தெளிவுபடுத்திய ரொனால்டோ, நான் உடற்றகுதி நிலையைப் பற்றியே கதைத்ததாகவும் வீரர் தொடர்பான தனது நிலையைப் பற்றி கதைக்கவில்லையென்றும் என சக அணி வீரர்கள் எவரைக் காட்டிலும் நான் சிறந்தவன் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
றியல் மட்ரிட்டின் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (27) நடந்த போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் அணியுடன் பெற்ற தோல்வியையடுத்தே மேற்படி கருத்தை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் லா லிகா புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விட ஒன்பது புள்ளிகள் குறைவாகவும் இரண்டாமிடத்தில் உள்ள அத்லெட்டிகோ மட்ரிட்டை விட நான்கு புள்ளிகள் குறைவாகவும் உள்ளது.
இப்போட்டியில் காயம் காரணமாக கரித் பேல், மார்சிலோ ஆகியோர் விளையாடத நிலையில், கரீம் பென்ஸீமா, பாதி நேரத்தில் பிரதீயீடு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, நான் எவரையும் அவமதிக்க விரும்பவில்லையென்றும் ஆனால், சிறந்த வீரர்கள் இல்லாத சமயத்தில் வெல்வது கடினம் என ரொனால்டோ தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .