2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஓய்வுபெற்றார் விரேந்தர் செவாக்

Gopikrishna Kanagalingam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விரேந்தர் செவாக், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். துபாயில் இடம்பெறவுள்ள மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதற்காகவே அவர் ஓய்வுபெறவுள்ளார்.
 

சர்வதேசப் போட்டிகள் தவிர, இந்தியன் பிறீமியர் லீக் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ள இந்தத் தொடரில் பங்குபற்றுவதற்கு, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் மாத்திரம் தெரிவுசெய்யப்படுவார்கள் என்ற விதி காணப்படுகின்றது.

அத்தொடரில் விளையாடவுள்ளதாகவும், அதன் காரணமாக சர்வதேசப் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வுபெறுவதாகவும் தெரிவித்த செவாக், அது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று விடுத்தார்.

இந்தியா சார்பாக 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு போட்டியிலும் பங்குபற்றியிருக்காத செவாக், தனது கிரிக்கெட் வாழ்வு குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ள மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக்கில், குமார் சங்கக்கார, அடம் கில்கிறிஸ்ட், பிரைன் லாரா, வசீம் அக்ரம், ஜக்ஸ் கலிஸ், மஹேல ஜெயவர்தன, சௌரவ் கங்குலி, மைக்கல் வோண், கிரேம் ஸ்மித் விரேந்தர் செவாக் ஆகிய முக்கிய வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .