2025 மே 19, திங்கட்கிழமை

ஓய்வு பெறவுள்ள செரீனா வில்லியம்ஸ்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரைத் தொடர்ந்து டென்னிஸிலிருந்து மேம்படவுள்ளதாக 40 வயதான வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

தனக்கு முக்கியமான ஏனைய விடங்களை நோக்கி நகருவதாக ஐ. அமெரிக்காவின் வில்லியம்ஸ் குறிப்பிட்டதுடன், ஓய்வு என்ற வார்த்தையை தான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக காயம் காரணமாக விளையாடமலிருந்த வில்லியம்ஸ், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் விம்பிள்டன் தொடரிலேயே தனிநபர் போட்டிகளுக்குத் திரும்பியுள்ளார்.

பகிரங்க காலத்தில் வில்லியம்ஸே அதிக தனிநபர் பட்டங்களை வென்றதுடன், மார்கரெட் கோர்ட்டின் அதிகமான 24 பட்டங்களை விட ஒரு பட்டமே குறைவாகப் பெற்றுள்ளார்.

தான் எட்டு வாரங்கள் கர்ப்பமாக இருக்கும்போது 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரையே இறுதியாக வில்லியம்ஸ் வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X