2025 மே 17, சனிக்கிழமை

ஓய்வு பெறுகிறார் வனிந்து ஹசரங்க

Simrith   / 2023 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார்.

வனிந்து தனது தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் தான் அந்த முடிவை எடுத்ததாக வனிந்து குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் போது 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு துடுப்பாட்ட வீரராக 196 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .