Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இங்கிலாந்தின் சகலதுறைவீரர் கிறிஸ் வோக்ஸ் அறிவித்துள்ளார்.
ஆஷஸ் குழாமில் 36 வயதான வோக்ஸ் இடம்பெறாததுடன், பின்னர் தங்களது திட்டங்களில் வோக்ஸ் இல்லையென இங்கிலாந்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் றொப் கீ தெரிவித்த நிலையிலேயே வோக்ஸ் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட வோக்ஸ் 62 டெஸ்ட்களில் 192 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 25.11 என்ற சராசரியில் 2,034 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 122 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 173 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் 33 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
உலகக் கிண்ணத்தை 2019ஆம் ஆண்டு வென்ற அணியிலும் 2022ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தை வென்ற அணியிலும் வோக்ஸ் இடம்பெற்றிருந்தார்.
10 minute ago
1 hours ago
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
27 Dec 2025
27 Dec 2025