2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஓய்வை அறிவித்த இனியஸ்டா

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனா மற்றும் ஸ்பெய்னின் முன்னாள் மத்தியகளவீரரான அன்ட்றியஸ் இனியஸ்டா தனது ஓய்வை செவ்வாய்க்கிழமை (09) அறிவித்துள்ளார்.

ஸ்பெய்னுக்காக 131 போட்டிகளில் விளையாடிய 40 வயதான இனியஸ்டா இறுதி நேரத்தில் பெற்ற கோலின் காரணமாக 2010ஆம் ஆண்டில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத்தை முதன்முறையாக ஸ்பெய்ன் கைப்பற்றியிருந்தது. தவிர 2008ஆம் ஆண்டு யூரோ கிண்ணத்தை ஸ்பெய்ன் வெல்லுவதற்கு இனியஸ்டா முக்கிய பங்காற்றியதுடன், 2012ஆம் ஆண்டு அதைத் தக்க வைக்கும்போது தொடரின் நாயகனாகத் தெரிவாகியிருந்தார்.

தனது 12ஆவது வயதில் பார்சிலோனாவின் லா மசியா இளைஞர் அகடமியில் இணைந்த இனியஸ்டா, 674 போட்டிகளில் பார்சிலோனாவுக்காக விளையாடியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .