2025 ஜூலை 30, புதன்கிழமை

ஓய்வை அறிவித்த றொஸ் டெய்லர்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 02 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் நடப்பு பருவகால முடிவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவ்வணியின் முன்னாள் தலைவரான றொஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரே 37 வயதான டெய்லரின் இறுதி டெஸ்ட் தொடராக அமையவுள்ளதுடன், பின்னர் அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கெதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் டெய்லர் விளையாடவுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டு, 110 டெஸ்ட்களில் 44.87 என்ற சராசரியில் 7,584 ஓட்டங்களைப் பெற்ற டெய்லர், 233 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 48.20 என்ற சராசரியில் 8,581 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், 102 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 1,909 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்ற டெய்லர், சர்வதேச கிரிக்கெட் சபையின் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை விளையாடுவதை இலக்கு வைத்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .