2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கிங்ஸ் லெவின் தலைவராக மில்லர்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இவ்வாண்டுக்கான போட்டிகளில், கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியின் தலைவராக, தென்னாபிரிக்க இளம் துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வணியின் தலைவராகக் கடந்தாண்டு செயற்பட்ட ஜோர்ஜ் பெய்லி, அக்கழகத்தால் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படாமையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

26 வயதான டேவிட் மில்லர், கடந்தாண்டு இடம்பெற்ற போட்டிகளில், 32.45 என்ற சராசரியில், 134.21 என்ற அடித்தாடும் வீதத்தில், 357 ஓட்டங்களைக் குவித்ததோடு, கிங்ஸ் லெவின் பஞ்சாப் சார்பாக 300 ஓட்டங்களைக் கடந்த ஒரேயொரு வீரராவார்.

இந்நியமனம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியின் பயிற்றுநரான சஞ்சய் பங்கர், 'வீரராக டேவிட் வளர்ந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன். அவர், அற்புதமான துடுப்பாட்டத் திறனையும் மிகவும் உயர் அழுத்த நிலைமைகளில் மிகவும் அமைதியான பண்பையும் வெளிப்படுத்தியுள்ளார். எங்களது வீரர்களை, இப்பருவகாலத்தில் வழிநடத்தும் அவரது திறன் மீது, எனக்கு நம்பிக்கையிருக்கிறது" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .