2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கோப்பா அமெரிக்கா: காலிறுதியில் அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 12 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க நாடுகளுக்கிடையிலான 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஐக்கிய அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பராகுவேக்குமிடையே இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் 1-0 என்ற கோல்கணக்கில் வென்றதன் மூலமே ஐக்கிய அமெரிக்கா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, ஐக்கிய அமெரிக்காவின் சிரேஷ்ட வீரர் கிளைன்ட் டெம்ப்ஸே பெற்றார்.

இதேவேளை, குழு ஏயிலிருந்து காலிறுதிப் போட்டிகளுக்கு கொலம்பியா தகுதி பெற்றிருந்த நிலையில், கொலம்பியா, கோஸ்டாரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதி குழு ஏ போட்டியின்போது கொலம்பியா அணியில் 10 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பயிற்சியாளரின் இந்த உத்தி பிழைக்க, 2-3 என்ற கோல்கணக்கில், கோஸ்டாரிக்காவிடம் தோல்வியுற்ற கொலம்பியா, காலிறுதிப் போட்டிகளில் பெரும்பாலும், கால்பந்தாட்ட ஜாம்பவானான பிரேஸிலைச் சந்திக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .