2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கோப்பா அமெரிக்கா காலிறுதியில் கொலம்பியா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 08 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னமரிக்க நாடுகளுக்கிடையே, ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்று வரும் 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, முதலாவது அணியாக கொலம்பியா நுழைந்துள்ளது.

தொடரின் ஐந்தாவது நாளில் இடம்பெற்ற, கொலம்பியா, பராகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில், கொலம்பிய அணியின் தலைவரும், அவ்வணியின் நட்சத்திர வீரருமான ஜேம்ஸ் ரொத்ரிகாஸ் பெற்ற கோலின் உதவியுடன், 2-1 என்ற கோல்கணக்கில் பராகுவேயை வீழ்த்தி குழு ஏயிலிருந்து காலிறுதிப் போட்டிக்கு மூதாலாவது அணியாக தகுதி பெற்றது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்கா, கோஸ்டாரிக்கா ஆகிய அணிகளுக்கிடையே இடம்பெற்ற மற்றைய குழு ஏ போட்டியில் 4-0 என்ற கோல்கணக்கில் கோஸ்டாரிக்காவை ஐக்கிய அமெரிக்கா வீழ்த்தியது. முதலவாது போட்டியில், கொலம்பியாவிடம் தோல்வியுற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கு இம்முடிவு ஆறுதலாய் அமைந்தது.

இந்நிலையில், இந்தக் குழு ஏயிலிருந்து கொலம்பியா, காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்காவும் பராகுவேயும் மோதுகின்ற போட்டியில் வெல்லும் அணியே, இக்குழுவிலிருந்து அடுத்த அணியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .