2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கோப்பா அமெரிக்கா காலிறுதியில் மெக்ஸிக்கோ; வெளியேறியது உருகுவே

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 10 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னமரிக்க நாடுகளுக்கிடையே ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் 100ஆவது கோப்பா அமெரிக்காத் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு மெக்ஸிக்கோ, வெனிசுவேலா ஆகிய நாடுகள் முன்னேறியதுடன், 15 தடவைகள் கோப்பா அமெரிக்கா சம்பியனான உருகுவே, குழு நிலைப் போட்டிகளோடு தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

தொடரின் ஏழாம் நாளின் முதற் போட்டியில், உருகுவே, வெனிசுவேலா அணிகள் மோதின. இப்போட்டியில், 0-1 என்ற கோல்கணக்கில் உருகுவே தோல்வியடைந்தது. தொடரின், தமது முதலாவது போட்டியிலும் மெக்ஸிக்கோவுடன் தோல்வியுற்றிருந்த நிலையில், இப்போட்டியில் பெற்ற தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது. மறுகணத்தில், தமது முதலாவது போட்டியில் ஜமைக்காவை வென்றிருந்த வெனிசுவேலா, இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன், குழு சியிலிருந்து முதலாவது அணியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

மேற்படி போட்டியில், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரஸ், அணியில் இடம்பெற்றிருக்காத நிலையில் தயார்ப்படுத்தல் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

அன்றைய, மற்றைய குழு சி போட்டியில், மெக்ஸிக்கோவும் ஜமைக்காவும் மோதியிருந்த நிலையில், ஸ்கேவியர் ஹெர்னாண்டஸின் கோல் கைகொடுக்க, 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. தொடரின் தமது முதலாவது போட்டியில் ஏற்கெனவே உருகுவேயை வென்ற மெக்ஸிக்கோ, இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன், இரண்டாவது அணியாக குழு சியிலிருந்து காலிறுதிக்குத் தகுதி பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .