Shanmugan Murugavel / 2016 ஜூன் 11 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க நாடுகளுக்கிடையிலான 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, 14 தடவை கோப்பா அமெரிக்கா சம்பியனான ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.
ஆர்ஜென்டீனா, பனாமா அணிகள் மோதிய குழு டி போட்டியொன்றில், இரண்டாவது பாதியில் களமிறங்கிய ஆர்ஜென்டீனா அணியின் தலைவரும் தற்போதைய தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவருமாகிய லியனல் மெஸ்ஸி பெற்ற ஹட்ரிக் கோலுடன் 5-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மெஸ்ஸி தவிர, சேர்ஜியோ அகுவேரோ, நிக்கொலஸ் ஒட்டமண்டி ஆகியோரும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, தற்போதைய கோப்பா அமெரிக்கா சம்பியன்களான சிலி, பொலிவியா அணிகளுக்கிடையிலான மற்றைய குழு டி போட்டியில், சர்ச்சைக்குரிய விதத்தில், 2-1 என்ற கோல்கணக்கில் சிலி வெற்றி பெற்றது. போட்டியின் இறுதிக்கணத்தில், பந்து கையில் பட்டது என சர்ச்சைக்குரிய வகையில் துணை மத்தியஸ்தர் தெரிவிக்க, சிலிக்கு வழங்கப்பட்ட பெனால்டியை ஆர்டுரோ விடால் கோலாக்கியதன் மூலமே சிலி வெற்றி பெற்றிருந்தது. சிலி சார்பாக முன்னர் பெறப்பட்ட கோலையும் விடாலே பெற்றிருந்தார்.
இந்தப் போட்டியில் சிலி வென்றதன் மூலம் சிலிக்கும் பனாமாவுக்கும் புள்ளிகள் சமநிலையில் உள்ளன. எனவே, இரு அணிகளும் விளையாடும் போட்டியில் வெல்லும் அணி, ஆர்ஜென்டீனாவுக்கு அடுத்ததாக காலிறுதிக்குத் தகுதி பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .