Shanmugan Murugavel / 2016 ஜூன் 02 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான காகா, தசைக் காயம் காரணமாக, தென்னமெரிக்க பிராந்திய நாடுகளிடையே இடம்பெறும் உலகின் மிகப் பழமையான கால்பந்தாட்டத் தொடரான கோப்பா அமெரிக்காவிலிருந்து வெளியேறியுள்ளார். காகாவை, போலோ ஹென்றிக்கே கன்ஸோ பிரதியீடு செய்கிறார்.
இத்தாலியின் ஏ.சி மிலன், ஸ்பெய்னின் றியல் மட்ரிட் ஆகிய கால்பந்தாட்டக் கழகங்களின் முன்னாள் மத்திய கள வீரரான காகா, தற்போது, ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்தாட்டத்தில் ஒர்லாண்டோ சிற்றி அணிக்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில், ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட குழாமில் இடம்பெற்றிருக்காத காகா, காயமடைந்த டக்லஸ் கோஸ்டாவுக்காகவே குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
குழாமிலிருந்து வெளியேறுகின்ற ஐந்தாவது வீரரான 34 வயதான காகா, மூன்று வாரமளவில் போட்டிகளில் பங்கேற்க முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்பா அமெரிக்காவின் 100ஆவது வருடப் பூர்த்தியானது ஐக்கிய அமெரிக்காவில் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பிக்கையில், தனது முதலாவது போட்டியில் ஈக்குவடோருடன் நாளை மறுதினம் சனிக்கிழமை (04) பிரேஸில் மோதுகிறது.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026