Shanmugan Murugavel / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் லீக்கின் மெல்பேர்ண்றெனிகேட்ஸ், அடிலெய்ட் ஸ்ரைக்கேர்ஸுக்கிடையே இன்று இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில் 12 பந்துகளில் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்த ரெனிகேட்ஸ் அணி வீரரான கிறிஸ் கெய்ல், இருபதுக்கு-20 போட்டியில் அதிவேகமாகப் பெறப்பட்ட அரைச்சதம் என்ற இந்திய கிரிக்கெட் அணியின் யுவராஜ் சிங்கின் சாதனையை சமப்படுத்தினார்.
இப்போட்டியில், மொத்தமாக 17 பந்துகளில் ஏழு, ஆறு ஓட்டங்கள், இரண்டு, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த கெய்ல், 2,0,6,6,6,6,2,6,6,4,1,6 என்ற வகையில் தனது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார்.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மெல்பேண் றெனிகேட்ஸ் 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .