2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

காலிறுதியில் ஜோக்கோவிச், செரினா, ஷரபோவா

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 24 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில், நொவக் ஜோக்கோவிச், செரினா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா ஆகியோர், நான்காம் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று, காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றனர்.

ஆண்களின் முதல்நிலை வீரரும் நடப்புச் சம்பியனுமான நொவக் ஜோக்கோவிச், 15ஆம் நிலை வீரரான பிரான்ஸின் கைல்ஸ் சிமோனை எதிர்கொண்டார்.  முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோக்கோவிச், அடுத்த செட்டை 6-7 என்ற கணக்கில் இழந்தார். மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், அடுத்த செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். தீர்மானமிக்க ஐந்தாவது செட்டில் கடுமையாகப் போராடிய ஜோக்கோவிச், 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.

பெண்களின் முதல்நிலை வீராங்கனையும், நடப்புச் சம்பியனுமான செரினா வில்லியம்ஸ், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில், ரஷ்யாவின் மார்கறிட்டா கஸ்பரியனை வெற்றிகொண்டார்.

5ஆம் நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா, 7-5, 7-5 என்ற செட் கணக்கில், 13ஆம் நிலை வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை வெற்றிகொண்டார்.

10ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்லோ சுவரேஸ் நவரோ, அவுஸ்திரேலியாவின் டரியோ கவ்ரிலோவாவை, 0-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

7ஆம் நிலை வீரரான ஜப்பானின் கேய் நிஷிகோரி, 9ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜோ வில்பிரட் சொங்காவை எதிர்கொண்டார். இறுக்கமான போட்டியாக அமையுமென எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியை, 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில், நிஷிகோரி வெற்றிகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .