Shanmugan Murugavel / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாடக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் தற்போதைய பயிற்சியாளரான லூயிஸ் வான் காலை பிரதியீடு செய்யும் பொருட்டு, ஜெர்மனிய கால்பந்தாட்டக் கழகமான பெயார்ண் முனிச்சின் பயிற்சியாளர் பெப் குவார்டிலோவை சந்தித்ததை மன்செஸ்டர் யுனைட்டெட் மறுத்துள்ளது.
கடந்த வாரம், பெப் குவார்டிலோவுடன் பிரான்ஸின் தலைநகர் பரிஸில் மன்செஸ்டர் யுனைட்டெட் சந்த்திதிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தக் தகவல் உண்மை இல்லை என மன்செஸ்டர் யுனைட்டெட் தெரிவித்துள்ளது.
நாற்பத்தைந்து வயதான பெப் குவார்டிலோ, இந்தக் கோடை பருவகாலத்துடன் பெயார்ண் முனிச்சிலிருந்து விலகுகின்றநிலையில், தனக்கு சில இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களிலிருந்து அழைப்பு கிடைக்கப்பெற்றதாக தெரிவித்திருந்தார்.
பெப் குவார்டிலோவை மன்செஸ்டர் சிற்றியே பணிக்கமர்த்த அதிக வாய்ப்புகள் காணப்படுகின்ற போதும் செல்சி மற்றும் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசைப்பட்டியலில், மன்செஸ்டர் யுனைட்டெட், ஐந்தாம் இடத்தை வகிக்கின்ற நிலையில், அண்மைய நாட்களாக அதன் பயிற்சியாளர் வான் கால் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .