Shanmugan Murugavel / 2016 மே 30 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடத்தப்பட்ட சர்வதேச கால்பந்தாட்ட வீரர் அலன் புலிடோ, கடத்தப்பட்டு சில மணித்தியாலங்களில் வட-கிழக்கு மெக்ஸிக்கோவிலிருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 வயதான புலிடோ, பன்டேஜ் சுற்றிய கையுடன் தோன்றியிருந்ததுடன் தான் மிக நன்றாக இருப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (29) தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், வேறு எந்தவிதத் தகவல்களையும் கூறியிருக்கவில்லை.
கிரேக்க அணியான ஒலிம்பியாகோஸ் அணிக்காக விளையாடும் மேற்படி முன்கள வீரர், மெக்ஸிக்கோ தேசிய அணிக்காகவும் சில போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.
தமௌலிபாஸ் மாநிலத்தின் சியூடாட் விக்டோரியாவுக்கு அருகில், கொண்டாட்டமொன்று முடிந்து வெளியேறும்போது சனிக்கிழமை (28) இரவு புலிடோ கடத்தப்பட்டிருந்தார்.
கார்த்தரிப்பிடத்தில், தனது நண்பியுடன் இருந்தபோது புலிடோவின் காரானது சில ட்ரக்களால் சூழப்பட்டதாகவும், முகமூடி அணிந்த ஆறு நபர்கள் வலுக்கட்டாயமாக அவரைத் தூக்கிச் சென்றதாகவும், அவரது நண்பியை எதுவும் செய்யவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .