2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

கப்பிட்டல்ஸின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கங்குலி

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான எஸ்.ஏ20 தொடரின் பிறிட்டோறியா கப்பிட்டல்ஸின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இந்தியாவின் முன்னாள் அணித்தலைவராக செளரஃப் கங்குலி கடமையாற்றவுள்ளார்.

தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் ட்ரோட்டையே கங்குலி பிரதியிடுகிறார்.

கடந்தாண்டு முதல் கப்பிட்டல்ஸின் தாய் நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட்டுக்கான இயக்குநராகவும் கங்குலி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலைமைப் பயிற்றுவிப்பாளராக கங்குலிக்கு இதுவே முதற்தடவையாகும்.  2019ஆம் ஆண்டு இந்தியன் பிறீமியர் லீக்கின் டெல்லி கப்பிட்டல்ஸின் ஆலோசகராகக் கடமையாற்றியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .